Thursday 7 March 2019

SONGS MENU

1. ஈடாக வேறேதுமில்லை(தீராத விளையாட்டுப் பிள்ளை)





ஈடாக வேறேதுமில்லை
எங்கள் இடையிரும் நட்பினுக்கீடேதுமில்லை
(3)
ஈடாக வேறேதுமில்லை….
அப்பப்ப சந்தித்துக் கொள்வோம்

அப்பப்ப சந்தித்துக் கொள்வோம்
கூடி சந்திக்கும் வேளையில் பேசிக் களிப்போம்
அப்பப்ப சந்தித்துக் கொள்வோம்
கூடி தித்திக்கும் வண்ணமே பேசிக் களிப்போம்
எங்கள் பிணைப்பென்ன..வென்றால் (3)
பிறவி நூறின் பிணைப்பின் பலம் என்று சொல்வோம்
ஈடாக வேறேதுமில்லை….
(MUSIC)
பலவுண்டு பொறுப்பெங்கள் வீட்டில் 
அதை அழகுறச் செய்து-பின் சென்று ஓடிப்-போய்
 குலவியே மகிழுவோம் நன்றாய்
அன்பைப் பொதுவாக்கி எம்மிடை பரிமாறிக் கொள்வோம்
ஈடாக வேறேதுமில்லை வேறேதுமில்லை வேறேதுமில்லை
(MUSIC)
கன்னலைப் போல் சொல்லினிப்பாய் (2) 
பலர் கண்ணே படும்-வண்ண..மே-பேசி மகிழ்வாய்
வண்ணப் புதுச்சேலை தனிலே

வண்ணப் புதுச்சேலை தனிலே 
மின்னி பாடிக்-களித்தே மகிழ்வோம்-சிறாராய்
(2)
ஈடாக வேறேதுமில்லை வேறேதுமில்லை வேறேதுமில்லை
(MUSIC)
பல்சுவையில் பண்டங்கள் செய்வோம் 
மனது பொங்கித் ததும்பவே நன்றாய் புசிப்போம்   
(2)
உண்டா வேறெங்குமிது போலே (2) 
எனக் கூறிப்-பாராட்டியே நன்றாய்-ரசிப்போம்
ஈடாக வேறேதுமில்லை
எங்கள் இடையிரும்  நட்பினுக்கீடேதுமில்லை
ஈடாக வேறேதுமில்லை…. வேறேதுமில்லை..வேறேதுமில்லை








SONGS MENU

1. ஈடாக வேறேதுமில்லை(தீராத விளையாட்டுப் பிள்ளை)